
தமிழ் மொழியை திரும்பவும் கற்க ஆவல் என்று நான் எழுதிய பதிவுக்கு நிறைய ஆதரவு இருந்தது .
இந்த அழகிய தமிழ் வார்த்தைகளை தொகுத்து வழங்கியது என் தோழி திருமதி சுதா மற்றும் அவரது கணவன் திரு கிருஷ்ணன்.
இந்த வார்த்தைகளை ஆழ்வார்கள் எப்படி கையாண்டார்கள் என்றும் காட்டுகிறார்கள் .
எண்ணி வியந்து மகிழ்கிறேன் என்னே என் தமிழ்!
எண்ணி வியந்து மகிழ்கிறேன் என்னே என் தமிழ்
தமிழனுக்கு பேசலைன்னா தூக்கம் வராது!
எத்தனை வகையான பேச்சு!
தொல்காப்பியர் இத்தனை வகையான பேச்சுகளைக் குறிப்பிடுகிறார்.
பேசு( speak) பகர்( speak with data) செப்பு(speak with answer) கூறு ( speak categorically) உரை ( speak meaningfuly) | நவில்( speak rhymingly) இயம்பு( speak musically) பறை ( speak to reveal) சாற்று ( speak to declare) நுவல் (speak with introduction) | ஓது ( speak to recite) கழறு( speak with censure) கரை( speak with calling) விளம்பு( speak with a message) |
நவில் – நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்
(திருப்பாவை – 9)
இந்த வார்த்தைகளை ஆழ்வார்கள் கையாண்ட விதம் பார்ப்போமா?
1. பேசு – எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்(திருப்பாவை-14)
2. பகர் – பாழிமையான கனவில் நம்மைப் பகர்வித்தார்(பெரிய திருமொழி 11-2-6)
3. செப்பு – தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்(திருப்பாவை 5)
4. கூறு – பல்லாண்டு கூறுவனே (திருப்பல்லாண்டு -8)
5. உரை – நாமமென்று நவின்று உரைப்பார்கள் (பெரியாழ்வார் திருமொழி (5-1-10)
6. நவில் – நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்(திருப்பாவை – 9)
7. இயம்பு – எண்ணிலா அருந்தவத்தோன் இயம்பிய சொல் (கம்பராமாயணம் – பாலகாண்டம்)
8. பறை – அறைபறை மாயன் மணி வண்ணன்(திருப்பாவை – 16)
9. சாற்று – தையில் மகத்துக்கு சாற்றுகின்றேன் (உபதேச ரத்தின மாலை 12)
10. நுவல் – நோயது நுவலென்ன நுவலாதே (திருவாய்மொழி 1-4-8)
11. ஓது – ஏது பெருமை இன்றைக்கு என்னில் ஓதுகின்றேன் (உபதேச ரத்தின மாலை 8 )
12. கழறு – காலி மேய்க்க வல்லாய் எம்மை நீ கழறேலே(திருவாய்மொழி 6-2-4)
13. கரையாய் காக்கைப் பிள்ளாய் (பெரிய திருமொழி 10-10-2)
14. விளம்பு – விளம்பும் ஆறு சமயமும் (திருவாய்மொழி 4-10-9)
எந்த மொழிகளில் இந்த சொல்லாக்கம் உண்டு?
எண்ணிப் பாருங்கள் தமிழின் வலிமையை!
தமிழனாய் பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டும்.
இந்த இனிய பதிப்பை நமக்குத் தந்த திருமதி சுதா கிருஷ்ணன் , திரு கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி