பேசுவது தமிழா?

நேற்று மும்பை முழுவதும் மின்சாரம் முடக்கம்.

இரவு உணவிற்குப் பிறகு வீடு அமைதியாக இருந்தது தொலைக்காட்சியின் ஆரவாரமில்லாமல். மெழுகுவத்தியின் மங்கிய ஒளியில் ஒன்றும் செய்ய முடியாமல் அமர்ந்திருந்த போது தமிழில் வார்த்தைகள் விளையாடுவோம் என்று ஆரம்பித்தோம்.

தமிழில் தானே தினம் பேசுகிறோம் வார்த்தைகளுக்கு என்ன பஞ்சம் என்று நான் நினைத்தேன்.

மூன்று சுற்று முடிந்ததுமே திணற ஆரம்பித்தோம்.

டம்ளர் டபரா டப்பா டமாரம் – இதெல்லாம் தமிழ் சொற்கள் இல்லை என்று வாதாடினேன்.

தமிழ் சீரியல்கள் பார்த்து வந்த வார்த்தைகள் பல – டுபாகூர், டம்பம் , பேஜாரு, மொக்கை.(எங்கிருந்து வந்தன இந்த சொற்கள்?)

சில வார்த்தைகள் பிற மொழியிலிருந்து வந்ததோ என்று சந்தேகம் – லாபம் , லட்சியம், பூஜை

தினசரி பேசுகையில் ஏன் மறந்து விட்டோம் தமிழை? 

டின்னர்   எப்படி இருக்கு? – சூப்பர் .

நியூ டிசைன் எப்படி – மொக்கை

என்று ஆங்கில வார்த்தைகள் நம்மை அறியாமல் நாம் பேசுகிறோம். இதில் நாங்கள் மும்பையில் இருப்பதால் தப்பும் தவறுமாக ஹிந்தி சொற்கள் வேறு சேர்த்துக்  குழப்புகிறோம்.

அழகிய தமிழ் வார்த்தைகள் ஒன்று இரண்டு வந்த  போது மகிழ்ச்சியாக இருந்தது  – சுவை , மணம் , தென்றல் , இனிமை.

பள்ளியில் தமிழை நேசிக்கக் கற்றுக் கொடுத்த மீனாட்சி டீச்சரை நினைத்துக்கொண்டேன். இப்படி தமிழை மறந்து விட்டோமே என்று வெட்கமாக இருந்தது.

இனி நான் தினமும் தமிழ்ப் புத்தகம் , கவிதை, பாடல் எதாவது படிப்பது என்று முடிவு செய்தேன்.

இதோ இன்றைய பதிகம் திருநாவுக்கரசர் பாடியது :

மாசில் வீணையும்

  மாலை மதியமும்

வீசு தென்றலும்

  வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை

  பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை

  இணையடி நீழலே. 

முழு பாடல் வேண்டுமெனில்  https://shaivam.org/thirumurai/fifth-thirumurai/196/thirunavukkarasar-thevaram-thani-thirukkurunthokai-maasil-veenaiyum

தமிழில் எழுதுவதென்று துணிந்து விட்டேன். தவறு இருந்தால் மன்னிக்கவும். 

சுட்டிக்காட்டுங்கள்.  திருத்திக் கொள்கிறேன்.

நீங்கள் தமிழில் படிக்கும் ரசிக்கும் புத்தகங்கள் கவிதைகள் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி.

One comment

  1. அருமை … நல்ல முயற்சி … வாழ்த்துகள்.

    நாங்க ஒரு விளையாட்டு விளையாடினோம். நான் Sunday என்று கூறினால் என் மகன் Bhanuvara என ஹிந்தியில் கூறினால், என் மகள் பானு வாரா என கண்ணடத்தில் கூறினால் என் மனைவி ஞாயிற்று கிழமை என கூறுவாள். இது போல அனைத்து பொருட்களும் கூறி விளையாடுவோம் …

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s